மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ப்ளூமெண்டல் பகுதியில் வைத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கிராண்ட்பாஸ் வீதியில் இடம்பெற்ற சரமாரியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லையெனவும் நிதித் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் இன்னும் யாரும் கைதுசெய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் 50 பேர்வரை உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச்சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
காணாமல் போன 6,700 பேர் குறித்த முதற்கட்ட விசாரணை நிறைவு!
16 மாணவர்கள் கைது – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை!
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


