மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு வைத்தியசாலையில் எலிகள் கடித்ததால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்செயலான விபத்து அல்ல, நேரடி கொலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதுமாகும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், சுகாதாரத் துறையை திட்டமிட்டு தனியாருக்கு ஒப்படைத்ததால்தான், அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு “மரணக் குகைகள்” ஆக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், மத்தியப் பிரதேச முதலமைச்சரும் வெட்கத்தில் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
UNHR Srilanka news Political
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


