கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹெய்ட்டியைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழு, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகின்றது.


