Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யவில்லை;

ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யவில்லை;

நமது நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் இதுவரை யாரும் கைது செய்யப்படாமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது வீட்டில் காணப்பட்ட வாகனம் மற்றும் உழவு இயந்திரம், வீட்டின் உடமைகள் பாரிய சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது

இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் உடனடியாக பொலிசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர்

அதற்குப் பின்பு இதுவரை பொலிசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை,இரவு நேரங்களில் மட்டும் வந்து தேடி விட்டு  ஓடி ஒழிந்து விட்டதாக எங்களிடம் கூறிச் செல்கின்றனர்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பான சிசிடிவி காணொளி பொதுசாலிடமும் ஒப்படைக்கப்பட்டது
ஆதாரங்கள் இருந்தும் சம்பந்தப்பட்ட நபர்களை ஏன் கைது செய்யவில்லை என்று பொலிசாரை கேட்டோம்.

இது கைது செய்யும் குற்றம் இல்லை என்று போலீசார் தெரிவித்ததாக  பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

அண்மையில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல் அப்பகுதியில் தொடர்ச்சியாக மது போதையில் அச்சுறுத்தி வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

பொலிசாருக்கும் தாக்குதல் மேற்கொண்ட வன்முறை குழுக்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதால் தான் பொலிசார் கைது செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments