மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி, தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.
கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன.
முன்னதாக வெளியான தீக்கொளுத்தி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் றெக்க றெக்க பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர்.


