இலங்கை பொலிஸ், வெளிநாட்டு பயணம் மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கான பல்வேறு அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டுப் பயணங்களுக்கான பொலிஸ் சான்றிதழ் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கு ரூ.5,000 அறவிடப்படும்.
மேலும், ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி 6 மணி நேரம் வரை ரூ.500, 6 முதல் 12 மணி நேரம் வரை ரூ.1,000, 12 மணி நேரத்திற்கு மேல் ரூ.2,000 வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிராந்திய பொலிஸ் நிலையங்களால் வழங்கப்படும் அறிக்கைகளுக்கு ரூ.500 அறவிடப்படும். உள்நாட்டு தேவைகளுக்காக பொறுப்பதிகாரியினால் (OIC) வழங்கப்படும் அறிக்கைகளுக்கு ரூ.300 வசூலிக்கப்படும். அதேபோல், ஒரு முறைப்பாட்டுப் பிரதியொன்றை பெறுவதற்கு ஒரு பிரதிக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என பொலிஸ் அறிவித்துள்ளது.


