Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகில் போதை பொருட்கள்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகில் போதை பொருட்கள்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் படகில் 11 ஹெரோயின் மற்றும் ஐஸ் பொதிகள் இருப்பதை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நீண்ட நாள் மீன்பிடிப் படகும், 05 சந்தேக நபர்களுடன் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தநிலையில் கைப்பற்றபட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments