மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன், இன்று பிற்பகல் விபத்தில் காயமடைந்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று மட்டக்களப்புக்கு திரும்பியபோது, அவர் பயணித்த வாகனம் கார் ஒன்றுடன் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நேர்ந்தது. இதில் காயமடைந்த ஶ்ரீநேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


