Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்3 வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்,தந்தை!

3 வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்,தந்தை!

யாழ்ப்பாணம், பொன்னாலை மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், குழந்தையின் தந்தை இரண்டு திருமணமானவர். அவரது இரண்டாவது மனைவியின் குழந்தைக்கே இவ்வாறு சித்திரவதை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குழந்தையின் தந்தையும், தாயும் தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்கள் மீது மிளகாய் தூள் இட்டதாகவும், மிளகாயை உண்ண கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை சித்திரவதை செய்யப்படுகின்றமை தொடர்பில் சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றனர்.

அந்தவகையில், கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை மீட்பதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments