சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், முறிந்த எலும்புகளை வெறும் மூன்று நிமிடங்களில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கியுள்ளனர். ‘போன்-02’ என அழைக்கப்படும் இந்த பசை, சிப்பிகள் நீரில் பாறைகளில் ஒட்டிக்கொள்ளும் முறையிலிருந்து சிந்தனை பெற்று உருவாக்கப்பட்டது.
இதன் சிறப்பம்சம் என்னவெனில், எலும்புகள் கூடிய பிறகு பசை தானாகவே கரைந்து விடுகிறது. தற்போது ஆய்வக பரிசோதனைகளும், 150 பேருக்கு மருத்துவ சோதனைகளும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை முறிந்த எலும்புகளை இணைக்க உலோக கம்பிகள், பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் புதிய பசை முறையைப் பயன்படுத்தினால், இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை என்பது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.


