Monday, March 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விஜய் பிரசாரத்தில் மைக் குழப்பம்!

விஜய் பிரசாரத்தில் மைக் குழப்பம்!

திருச்சியில் தவெக தலைவர் விஜய் முதல் தேர்தல் பிரசாரத்தில் பேச்சு தொடங்கியபோது, மைக் சரியாக வேலை செய்யாததால் கூட்டம் ஏமாற்றமடைந்தது.

மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று விஜய் உரையாற்றினார். ஆனால் மைக் வேலை செய்யாததால் அவர் என்ன பேசினார் என்பதே கூட்டத்தில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.

இதையடுத்து, “நான் பேசுறது கேட்கிறதா?” என விஜய் சைகையில் கேட்டார். அதற்கு ‘இல்லை இல்லை’ என தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் விஜயின் பேச்சைக் கேட்க வந்த பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், தொலைக்காட்சி வழியாக விஜய் பேச்சைக் கேட்க காத்திருந்தவர்களும் ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது.

திருச்சியில் நடைபெற்ற தனது முதல் பரப்புரையிலேயே மைக் சொதப்பியதால் தவெக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments