Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ரஜீவன் எம்.பி வடமராட்சி பிரதேச செயலாளருக்கும் இடையில் சந்திப்பு..!

ரஜீவன் எம்.பி வடமராட்சி பிரதேச செயலாளருக்கும் இடையில் சந்திப்பு..!

வடமராட்சி கிழக்கு பிரதேச அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் தலமையிலான குழுவினற்கும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திருமதி உஷா மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இன்றைய தினம் காலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது

இவ் சந்திப்பில் புயலிற்கு பிந்திய
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு, அவசர தேவைகள், நிவாரணப் பொருட்கள் விநியோகம், மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இச் சந்திப்பில தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஸாம் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் உதயபாஸ்கரன் அவர்களும் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரிதா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments