Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மாகந்துரே மதுஷ் மரணம்: மனைவியின் நீதி தேடல்!

மாகந்துரே மதுஷ் மரணம்: மனைவியின் நீதி தேடல்!

மறைந்த பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவி, தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது கணவர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணம் அடைந்ததில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் வீதியில் மிருகம் போலக் கொலை செய்யப்பட்ட சம்பவமாக இது அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவம் நடந்ததிலிருந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தான் பொலிஸ் மா அதிபரை நாடியதாகவும், அதிகாரிகளிடமிருந்து நீதி எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்போது சமூகத்தில் பெரிதும் பேசப்பட்ட சில நபர்களுடனான அவரது கணவரின் தொடர்புகள் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததா என்ற சந்தேகமும் உள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சட்டத்தை நிலைநிறுத்தும் என நம்புவதாகவும் மாகந்துரே மதுஷின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments