மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் இருந்த பல உறுப்பினர்கள் அநுரகுமார அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் தற்போது உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஒருவரின் செயற்பாடு வழக்கத்திற்கு முரணாண வகையில் இருக்கும் போது அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்படும் பட்சத்தில் ஊழலை எதிர்ப்பதாக கூறும் அரசாங்கம் அதனை எதிர்க்கின்றது.
எனவே, அநுர அரசாங்கமும் முறைகேடுகளை தவிர்க்க முயற்சிக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பொரளையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>


