Monday, March 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்தியாவுக்கு செல்வதில் கௌரவம் - மெஸ்ஸி

இந்தியாவுக்கு செல்வதில் கௌரவம் – மெஸ்ஸி

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக செல்வது குறித்து கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தான் மிகவும் கௌரவமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் விளையாடிய மெஸ்ஸி, இந்தாண்டு இறுதியில் கேரளாவில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு செல்வது குறித்து மெஸ்ஸி தெரிவித்ததாவது:

இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த நாடு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்த நல்ல நினைவுகள் எனக்குள் இருக்கின்றன.

இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். இந்தியா, கால்பந்தில் ஆர்வமுள்ள நாடு. அழகான இந்தக் கால்பந்து மீதிருக்கும் எனது அன்பைப் பகிரும்போது புதிய தலைமுறை கால்பந்து ரசிகர்களை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.

நட்பு ரீதியான போட்டியில் விளையாட கேரளாவுக்கு, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி இந்தியா செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

குழந்தையை கைவிட்டு சென்ற17 வயது தாய்!

பாசிக்குடா பற்றைக்காடுகள், தனியார் தென்னந் தோப்புகளில் தீ பரவல்..!

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் மீட்பு

நன்னடத்தை மையங்களில் குழந்தைகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments