ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் காலமானார்.
ஏ.வி. எம் சரவணன் இன்று (04) வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் காலமானார்.
உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் தனது 86 வயதில் காலமானார்.
இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏ.வி.எம். மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.


