Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பதுளை மீகஹாகியுலா பகுதியில் மண்சரிவு!

பதுளை மீகஹாகியுலா பகுதியில் மண்சரிவு!

பதுளை , மீகஹாகியுலா பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (10) காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதுளை – மஹியங்கனை வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிரமங்களைச் சரிசெய்ய, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த வீதியில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments