கட்டைக்காட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட நால்வரையும் ஏழு நாட்களின் பின் இன்று கிளிநொச்சி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி கட்டைக்காடு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்
இதன்போது வீட்டில் காணப்பட்ட வாகனம் உழவியந்திரம், வீட்டின் உடமைகள், சிசிடிவி ஆகிய பொருட்கள் பலத்த சேதமடைந்திருந்தன
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிசார் பலமுறை முயற்சி செய்திருந்தார்கள்
குறித்த குற்றச்செயலில் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்த நிலையில்
குறித்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் நால்வர் கடந்த 6-1-2026 மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தமது வழக்கறிஞர் ஊடாக சரணடைந்தனர்
சரணடைந்தவர்களை 7-1-2026 அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நால்வரையும் எதிர்வரும் 14-01-2026 வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார்.
ஏழு நாட்கள் விளக்கமறியலின் பின் மீண்டும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நால்வரையும் கடும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


