Monday, June 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்"நீதி வெல்லும்" -உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு விஜய் வரவேற்பு!

“நீதி வெல்லும்” -உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு விஜய் வரவேற்பு!

கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பொலிஸை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

இந்த வழக்கை இன்று (13) விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘நீதி வெல்லும்’ என பதிவிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments