யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் விவாதத்தில் உரையாற்றினார்.
தனது உரையைத் தொடங்கிய அவர், “நான் சிங்களத்தில் பேசுவது உங்களுக்கு விருப்பம்தானே” என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, “நான் கேட்கிறேன், இங்கிருக்கும் யாராவது ஒருவர் கையை உயர்த்தி, பிரபாகரன் பயங்கரவாதி என்று கூறுங்கள்” எனக் கேட்டார். ஆனால், அங்கு இருந்த எவரும் கையை உயர்த்தவில்லை.
இந்நிலையில், “உங்களுடைய ரோஹன விஜயவீர பயங்கரவாதி இல்லை என்று நான் கையை உயர்த்திக் கூறுவேன்” எனவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கள் பாராளுமன்றத்தில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


