Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிலாபம்-புத்தளம் பாலத்தை சீரமைக்கும் இந்தியா இராணுவம்

சிலாபம்-புத்தளம் பாலத்தை சீரமைக்கும் இந்தியா இராணுவம்

டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த சிலாபம் – புத்தளம் வீதியை இணைக்கும் பாலத்தை மீளச் சீரமைக்கும் பணியை இந்திய இராணுவப் படைப்பிரிவின் களப் பொறியியலாளர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்த குழுவினர் நேற்றிரவு (3) இலங்கையை வந்தடைந்ததாகவும், இன்று காலை 7:30 அளவில் தங்கள் சரக்குகளை இறக்கும் பணிகளை நிறைவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற அவர்கள், பாலத்தின் சேதங்களை ஆய்வு செய்ததுடன்,. ஆய்வுகளைத் தொடர்ந்து, சீரமைப்புப் பணிகளை விரைவில் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில், அனர்த்தத்தின்போது சேதமடைந்த முக்கிய உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதில் இந்திய இராணுவத்தின் நேரடிப் பங்களிப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments