நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பெப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாகாண சபை அமைப்பு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
தற்போது மாகாண சபை அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசியலமைப்பின் 3ஆவது பிரிவின்படி வாக்களிக்கும் உரிமை மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.
நீண்ட கால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.


