Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கணவன் மரணம்; மனைவி கைது!

கணவன் மரணம்; மனைவி கைது!

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் நேற்று காலை தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர், நேற்றையதினம் காலை உயிரிழந்தவரின், மனைவி அவரை ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் 53 வயதான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments