திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளில், கணவன் – மனைவி இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.


