Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

மன்னார் நிருபர்

மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (20) வியாழன் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்கு பற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

இதன் போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவீரர்களை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது கலந்து கொண்ட மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தமது அஞ்சலி செலுத்தினர்.

இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் நினைவாக மரக்கன்றுகள் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments