வெப்பமான வானிலை நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 03.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (15) வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், மேலும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வெப்பக் குறியீடு – அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை – “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெப்பமான சூழ்நிலையில் மக்கள் தண்ணீர் அதிகமாக குடிக்கவும், மதிய நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வளிமண்டல திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


