Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்குடும்ப செலவு அதிகரிப்பால் குடும்ப தலைவன் உயிர் மாய்ப்பு!

குடும்ப செலவு அதிகரிப்பால் குடும்ப தலைவன் உயிர் மாய்ப்பு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது மயிலார்தேவ் பள்ளி.

இங்கு பீகாரை சேர்ந்த நவ்ஷாத் (வயது 45), காத்தூன்(38) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்று உழைத்து பிள்ளைகளை காப்பாற்றி வந்தனர்.

ஆனால் குடும்பத்தில் செலவு கூடுதலாகி கொண்டே வந்ததால், நவ்ஷாத் மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்தார்.

இந்த நிலையில் நவ்ஷாத் சம்பவத்தன்று நன்றாகக் குடித்துவிட்டு வந்து வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டி உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைப் பார்த்து அவரது மனைவியும், பிள்ளைகளும் கதறி அழுத நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து நவ்ஷாத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments