இன்று தங்க விலையில் இரு தடவைகள் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,875 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


