சுற்றுலா பிரதேசமாக விளங்கும் பாசிக்குடா அனிலானா விருந்தகத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காடுகள், தனியார் தென்னந் தோப்புகளில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மாநகர சபை தண்ணீர் தாங்கி, ஓட்டமாவடி சபை தண்ணீர் தாங்கி, மாநகர சபை தீயணைக்கும் இயந்திரம் கொண்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினரும் பங்களிப்பு செய்திருந்தனர். கோறளைப்பற்று பிரதேச சபை அதிகாரிகளும், சுற்றுலா விடுதி மேலாளர் மாகீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தீயணைப்பு இயந்திரம் இல்லை. இதனால் இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சிரமமாகவுள்ளதாகவும் மட்டக்களப்பில் இருந்து வரும் வரையில் காத்திருக்கும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



