Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடமராட்சி கிழக்கில் தேங்கும் குப்பைகள்

வடமராட்சி கிழக்கில் தேங்கும் குப்பைகள்

வடமராட்சி நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகள் குப்பைக்காடாக காட்சி அளிக்கின்றன

கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக பெருமளவான குப்பைகள் குடிமனைக்குள் அடித்து வரப்பட்டன.

இதனை உடன் அகற்றுமாறு அல்லது எரியூட்டுமாறு உரிய தரப்பினருக்கு பொதுமக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன

குப்பைகள் அகற்றப்படுமென பிரதேசசபையால் தெரியப்படுத்தப்பட்ட போதும் பல நாட்கள் கடந்தும் பிரதேச சபையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குப்பைகள் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் தேங்கி காணப்படுகிறது
இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் குறித்த பிரதேசத்தில் நிலவுகின்றது.

மீண்டும் யாழ் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் குறித்த குப்பைகள் அகற்றப்படாமல் அதே இடத்தில் இருப்பதால் மக்கள் தொடர்ந்தும் நோய்களால் பாதிப்படைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உடன் தேங்கி காணப்படும் குப்பைகளை அகற்றுமானும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments