Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!

கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், குறைந்த பயண நேரத்துடன் 9 இந்திய நகரங்களை இலங்கையுடன் இணைக்கும் 88 விமான சேவைகளை இயக்குவதாகவும், விரைவில் கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்க உள்ளதாகவும் கோயம்பத்தூருக்கு விஜயம் செய்த இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் குழு தெரிவித்துள்ளது.

கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் விருந்தக அரங்கில் நடைபெற்றது.

இதில் இலங்கை சுற்றுலா துறையின் துணை அமைச்சர் ருவான் ரணசிங்க மற்றும் சுற்றுலா துறை தொடர்பான அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கருத்துவௌியிட்டனர்.

அவர்கள் கூறுகையில், இந்தியாவிலிருந்து இதுவரை இல்லாத அளவில் பயணிகளின் வருகை இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும், இந்தியா தொடர்ந்து இலங்கையின் முதன்மை சுற்றுலா சந்தை மையமாக திகழ்வதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா அற்ற நுழைவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments