Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ பரவல்

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ பரவல்

மலையக நிருபர்

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்து உள்ளது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments