(வடமராட்சி நிருபர்)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் உயிரிழந்த முன்னாள் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழக தலைவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது
செந்தமிழ் விளையாட்டுக் கழக மைதானத்தில் முற்பகல் 11.00 மணியளவில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
அன்னாரின் பூதவுடல் மைதானத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள், உற்றார், உறவினர்கள்,சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகளால் மலர் அஞ்சலி இடம்பெற்றது.
அதன் பின்பு அன்னாரின் பூதவுடல் உடுத்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது
கடந்த (2) அதே பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரான விக்கனம் என்னும் குறித்த நபர் செந்தமிழ் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர் மற்றும் விளையாட்டுக்கழக வீரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.





