Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மகனின் தொடர் அட்டகாசத்துக்கு தந்தை வைத்த முற்றுப்புள்ளி!

மகனின் தொடர் அட்டகாசத்துக்கு தந்தை வைத்த முற்றுப்புள்ளி!

கஞ்சா போதையில் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகனை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அம்பத்தூர் அருகே நடந்துள்ளது.

சென்னை, அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவரின் மகன் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்.

அடிக்கடி வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்து, பெற்றோருடன் சண்டையிட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, போதையில் வந்த மகன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை இறைச்சி வெட்டும் கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலைக்கு பிறகு, மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, மனைவியை மகள் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, வழக்கமான வேலைக்கு சென்றுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த தாயையும் அம்பத்தூர் பொலிஸார் கைது செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments