Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மகாவலி ஆற்றில் 'அதி வெள்ள அபாய எச்சரிக்கை'

மகாவலி ஆற்றில் ‘அதி வெள்ள அபாய எச்சரிக்கை’

மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் ‘அதி வெள்ள அபாய எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல் 12:30 அளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் மனம்பிட்டிய நீர் மானியின் நீர்மட்ட அளவீடுகளைக் கருத்தில் கொண்டு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திம்புலாகல, தமங்கடுவ, வெலிகந்த, லங்காவிலையபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கின்னியா மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அபாயகரமான வெள்ள மட்டத்திற்கு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாவலி ஆற்றை அண்மித்து வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், உருவாகும் அபாயகரமான வெள்ள நிலைமைகளில் இருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரைவில் வெளியேறுவது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அதி வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி பிற்பகல் 12:30 மணி வரை அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments