ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று (13) இடம்பெற்ற வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாட்ரிட்டின் தென்-மத்திய வல்லேகாஸ் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள், அம்புலன்ஸ்கள், காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஸ்பானிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளில் மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இடிபாடுகளுக்குள் எவரும் சிக்கியிருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெடி விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.


