இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (27)காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இதனை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
எனினும், இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


