Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விபத்து ஏற்படாமல் பயணிகளை காப்பாற்றிய சாரதி!

விபத்து ஏற்படாமல் பயணிகளை காப்பாற்றிய சாரதி!

நமது நிருபர்

நுவரெலியாவில் இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்ய வருககைதந்திருந்த குலாமொன்று தடை செய்யப்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றில், திடீரென தடுப்புத்தொகுதி (ப்ரேக்) இயங்காமல் போனமையினால், சாரதி அந்த பேருந்தை மண்மேடொன்றில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நேற்று (06) மாலை நுவரெலியாவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த இந்த பேருந்து நானுஓயா குறுக்கு வீதி பகுதியில் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வலது புறத்தில் பாரிய பள்ளம் காணப்பட்டதால் சாதுர்யமாக செயற்பட்ட சாரதி, வீதியின் இடப்பக்கத்தில் பேருந்தை செலுத்தி மண்மேட்டின் மீது மோதி அதனை நிறுத்தியுள்ளார்.

அவ்வாறு பேருந்து நிறுத்தப்பட்டிருக்காவிடின், மறுபுறத்தில் உள்ள சுமார் 500 மீற்றர் பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்துள்ளனர். சாரதியே இந்த பேரும் விபத்தை தடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments