கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (09) கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2019ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது, 2001ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
முன்னாள் அமைச்சர் டக்ளசின் விடுதலையை கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்


