பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என கோரி பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை படை மற்றும் மஜீத் பிரிகேட்டை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க கோரி ஐநாவில் சீனாவும், பாகிஸ்தானும் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பலுசிஸ்தான் விடுதலைப் படை பொதுமக்களின் பாதுகாப்புக்கும், பாகிஸ்தான் அரசின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டது.
இந்த பலுசிஸ்தான் விடுதலைப் படை (Balochistan Liberation Army (BLA) என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், மஜீத் படைப்பிரிவு என்ற அமைப்பும் இதில் அடங்கும். இந்த அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் உலகளாவிய பயங்கரவாதி (SDGT) ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


