நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அவற்றை அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள், உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மலையகப்பகுதிகளில், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


