பிரதமர் ஹரிணி அமரசூரியாவை பதவியில் இருந்து நீக்குவதாக எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இவை எதிர்க்கட்சியினரின் வெறும் கனவுகள் மட்டுமே. நீண்ட காலமாக உண்மையற்ற வதந்திகளை அவர்கள் பரப்பி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்கள் எதிர்க்கட்சியினரின் தோல்வியையே வெளிப்படுத்துவதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் பதவி உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.


