Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சார்லி கிர்க் கொலை - சந்தேகநபர் கைது!

சார்லி கிர்க் கொலை – சந்தேகநபர் கைது!

அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (31) பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திறந்தவெளி விவாதத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 22 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.

சார்லி கிர்க் 2012ல் Turning Point USA (TPUSA) எனும் மாணவர் அமைப்பை தொடங்கினார். கடந்த தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு அந்த அமைப்பு பெரும் பங்களிப்பு செய்தது.

இந்த சம்பவத்துக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இரங்கலின் அடையாளமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளும் தாக்குதலைக் கண்டித்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments