தமிழகம், கரூர் சன நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அத்துடன், விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய, சி.பி.ஐ. தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது


