Saturday, March 21, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் - 8 பேர் பலி; 24 பேர்...

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 8 பேர் பலி; 24 பேர் காயம்

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூந்து ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இதனை குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே இன்று மாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

செங்கோட்டை மெட்ரோ தொடரந்து நிலையத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிற்றூந்தொன்றில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் மூன்று முதல் நான்கு வாகனங்களுக்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பணிகளுக்காக சம்பவ இடத்துக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடி விபத்துக்கான காரணம் மற்றும் அதன் தன்மை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments