Tuesday, March 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்இளம் பாடகர்களுக்கு களம் அமைக்கும் 'தமிழ் ஆரம் ரீ.வி.யின் ஏழு ஸ்வரங்கள்'

இளம் பாடகர்களுக்கு களம் அமைக்கும் ‘தமிழ் ஆரம் ரீ.வி.யின் ஏழு ஸ்வரங்கள்’

 

 

கனடாவில் இயங்கும் தமிழ் ஆரம் தொலைக்காட்சியின் “ஏழு ஸ்வரங்கள் ஜூனியர் சீசன் 1” நிகழ்ச்சியின் ஊடாக பல இளம் பாடகர்கள் தமது திறமைகளை வௌிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சரிகமபா போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஈடான களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை தமிழ் ஆரம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

“ஏழு ஸ்வரங்கள் ஜூனியர்” நிகழ்ச்சி தொடர்ந்தும் பல கட்டங்களை தாண்டி எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளில் உள்ள அனைத்து இளம் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதுடன், இந்தியாவிற்கு சென்று இசை சார்ந்த போட்டிகளில் பங்கேற்பதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கனடாவில் இவ்வாறான திறமைகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ் ஆரம் தொலைக்காட்சியின் ஏழு ஸ்வரங்கள் ஜூனியர் நிகழ்ச்சி வித்திடுகின்றது.

அந்த வகையில், கனடா- ஸ்காபுறோ நகரில் இசை ரசிகர்களுக்கு `இசையின்பத்தை` அள்ளி வழங்கும் நோக்கில் தமிழ்நாட்டிலிருந்து பிரபல பாடகர் மற்றும் பாடகி கனடா வந்திருந்தனர்.

நேற்றையதினம் (04) கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள தமிழிசை கலா மன்ற மண்டபத்தில் திரு.கேதீஸ் அவர்களின் `தமிழ் ஆரம்`தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய 7 ஸ்வரங்கள் பாடல் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பாடகராகவும் சீ-தமிழ் தொலைக்காட்சியின் வெற்றியாளர் வர்ஷா வருகை தந்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் குரு யோகராஜா அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் `நெஞ்சம் மறப்பதில்லை` இசை நிகழ்ச்சியிலும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கலை மாமணி ராமு அவர்களோடும் இணைந்து பாடவுள்ளார்.

குறித்த இரண்டு பாடகர்களும் கடந்த 1ம் திகதி ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்கள் இருவரையும் நண்பர்கள் ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த நண்பர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments