Wednesday, March 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மந்திரிசபை உறுப்பினர்கள், முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன், பின்னர் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

உடல்நலக் கோளாறு காரணமாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர். 152 வாக்குகள் வித்தியாசத்தில் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments