Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 4 இலட்சம் அபராதம்

வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 4 இலட்சம் அபராதம்

நிட்டம்புவ நகரில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக, போத்தல் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு அத்தனகல்ல நீதவான் மஞ்சுள கருணாரத்ன 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

குறித்த வர்த்தகர் 70 ரூபாய் என விலையிடப்பட்டிருந்த 500 மில்லிலீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை 90 ரூபாய் மற்றும் 100 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்வது சட்டவிரோதம் என வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டங்களை மீறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நீதவான் முன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் காரணிகளையும் கருத்திற்கொண்டே இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments