Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் இருந்து கொழும்பு சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது

யாழில் இருந்து கொழும்பு சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார்.

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கலா ​​ஓயா அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியது.

பேருந்தில் சிக்கியிருந்து 40 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேரடியாக சென்று காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் ஹெலிகொப்டர்களை அதிகம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments