Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2026 பாதீடு! ஜனாதிபதியின் உரையில் இருந்து

2026 பாதீடு! ஜனாதிபதியின் உரையில் இருந்து

வாகன இறக்குமதி தொடர்பில்;

2025 ஆம் ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1933 மில்லியன் டொலர் கடன்பற்று பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் கொடுப்பனவு;

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, பண்டிகை முற்பணமான ரூபா 10,000 ரூபாவினை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கேற்ப, 4.2 சதவீத வட்டி அடிப்படையில் பெற்றுக்கொள்ளக் கூடிய இடர் கடன் முற்பணத் தொகையை, ரூபா 250,000இலிருந்து ரூபா 400,000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முற்பணங்கள் குறுகிய காலத்திற்குள் இடையூறின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக, அரச ஊழியரக்ளின் முற்பணக் கணக்கு வரையறைக்கென ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரச பேருந்து உள்ளிட்ட பொது  போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி:

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பொது போக்குவரத்தை மேம்படுத்த ரூபா 67,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 600 புதிய அரச பேருந்துகளுக்கு ரூபா 3,600 மில்லியன், தேய்ந்து போன 307 எஞ்சின் அலகுகளை மாற்ற ரூபா 2,062 மில்லியன் மற்றும் டிப்போ மேம்பாடுகளுக்கு ரூபா 790 மில்லியன் ஆகியவை அடங்கும்.

மேலும், இலங்கை தொடருந்து சேவைக்கு ஐந்து புதிய டீசல் மல்டிபிள் யூனிட்கள் (DMU) மற்றும் மின் டிக்கெட் உட்பட தொடர்ச்சியான டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ரூபா 3,300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கூடுதலாக, தனியார் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமப்புற போக்குவரத்து வழிகளை ஆதரிக்க ரூபா 2,000 மில்லியன் நிதி வழங்கப்படும்.

பெருந்தோட்ட மக்களுக்கு 2000 வீடுகள்..

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ரூபா 1305 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments